சர்ச்சுக்கு வந்த திருமணமான பெண்ணுடன் சல்லாபம்! பாதிரியார் மனோஜ் மீது பகீர் புகார்! கணவன் கூறிய அதிர வைக்கும் சம்பவம்!

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் அடுத்த அதிர்ச்சியாக, பாதிரியார் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது.


கேரளாவில் சமீப காலமாக, கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில், இளம்பெண் ஒருவர் பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்காக, பாவமனிப்பு கேட்கச் சென்ற இளம்பெண்ணை, குறிப்பிட்ட பாதிரியாரின் நண்பர்களான 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தனர். இதன்பேரில், அந்த பெண் போலீசில் புகார் செய்ய சம்பந்தப்பட்ட 4 பாதிரியார்களும் கைது செய்யப்பட்டனர்.    

இதேபோல, சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது கன்னியாஸ்திரி லூசி களப்புரா, பாலியல் புகார் தர, அதன்பேரில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி, நடைபெற்று வருகிறது.   

இப்படி பாதிரியார்கள் மீதான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் சூழலில், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் மனோஜ் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். சேவாயூர் திருச்சபையில் பணிபுரிந்தபோது, மனோஜ் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வெளியில் சொல்லக்கூடாது எனக் கூறி மிரட்டி வந்ததாகவும், அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தாமரசேரி மறை மாவட்ட நிர்வாகத்தில் புகார் செய்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான் போலீசில் புகார் செய்ய தீர்மானித்தேன், என்றும், அப்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதிரியார் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.