சிக்கன் குழம்பில் விஷம்! உயிருக்கு போராடிய கணவனுக்கு தண்ணீரில் சயனைடு..! பதற வைக்கும் செயலில் ஈடுபட்ட மனைவி!

கேரள மாநிலத்தில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த பெண்ணை கைது செய்த வழக்கில் தற்போது மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.


கேரள மாநிலம் கோழிக்கோடு கூடத்தை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஜோலி 47, இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த நபருடன் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் கணவரின் சொத்து மற்றும் பணத்தின் மீது ஆசைப்பட்ட ஜோலி கணவரை விட்டுப் பிரியாமல் அவருடனே வாழ்ந்துள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் கணவரின் குடும்பத்தினரை வெறுக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அவரது முதல் கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவருக்கு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடித்த 14 ஆண்டுகளில் சுமார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்களை கொடூரமாக கொலை செய்துள்ளார். தான் ஆடம்பரமாக வாழ்வதற்காகவும் பணத்தின் மீது கொண்ட ஆசையாலும் இவ்வளவு கொலைகளை செய்துள்ளார்.

இதையடுத்து கொலை வழக்கில் அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது ஜோலி வழக்கில் குற்ற பிரிவு புலனாய்வுத்துறையினர் 1800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாமரசேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.ஜோலியின் 2 குழந்தைகள் மற்றும் 246 பேர் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஜோலி தனது கணவரை எப்படி கொன்றார் என்பது குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தனது கணவருக்கு சிக்கன் குழம்பு வைத்து கொடுத்துள்ளார் அதில் சாய்டு கலந்ததாகவும் அதை சாப்பிட்ட கணவர் தண்ணீர் கேட்டு போராடியுள்ளார். இதையடுத்து குடிக்க கொடுத்த தண்ணீரிலும் சயனைடு கலந்து கொடுத்து தனது கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த சம்பவம் குற்றப்பத்திரிக்கையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.