கணவன், குழந்தை என 6 பேரை இப்படித்தான் கொலை செய்தேன்..! தத்ரூபமாக நடித்துக் காட்டிய பெண்! மிரண்ட போலீஸ்!

கேரளாவில் கள்ளக்காதலனை மணக்கவும், சொத்தை அபகரிக்கவும் 14 ஆண்டுகளில் 6 கொலைகள் செய்த பெண் அவற்றை எப்படி செய்தார் என தத்ரூபமாக நடித்து காட்டியுள்ளார்.


கோழிக்கோடு மாவட்டம் கூடத்தொரை பகுதியில் 2002 முதல் 2016 வரை 6 பேர் மர்ம முறையில் உயிரிழந்தனர். ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் இறந்து போனவர்களின் மறுஉடற்கூறு ஆய்வு செய்ததில் அனைவருமே விஷம் வைத்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில் சொத்தை அபகரிக்க ஜான்தாமஸ் என்பவரின் மருமகள் ஜோலி செய்த கொலைகள் என தெரியவந்தது. மேலும் அவரிடம் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார் ஜோலி. சொத்துக்காக மட்டும் அல்லாது கள்ளக் காதலன் சாஜூவுடன் சேர்ந்து வாழவும்தான் இப்படி திட்டமிட்டு விஷம் வைத்து 6 பேரை கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக் காதலன் சாஜூவுடன் வாழ்வதற்காக அவரது மனைவியையும் தீர்த்துக் கட்டினார் என்பதெல்லாம் பழைய விஷயம். இந்நிலையில் ஜோலி உள்பட 3 பேர் கைதான நிலையில் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அனைவரும் கொலை நடந்த பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது அங்கு ஜோலி தன்னுடைய கணவரை எப்படி கொலை செய்தார் என்பதை தத்ரூபமாக செய்து காட்டினார். பின்னர் அவர்கள் சிறைக்கு அழைத்த செல்லப்பட்டனர். மேலும் மற்ற 5 பேரை கொன்றதற்கான ஆதாரத்தையும் போலீசார் திரட்டி வருகின்றனர். ஒருவேளை ஆதாரம் கிடைக்காவிட்டால் கணவரை கொன்றதற்கான தண்டனை மட்டும் ஜோலிக்கு கிடைக்கும் என சட்ட வட்டாரங்கள் கூறுகிறது.