முதலில் தாய்ப் பால் கொடுத்தேன்..! முடித்ததும் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டேன்! போலீசை அதிர வைத்த கொடூர தாய்!

கேரள மாநிலத்தில் காதலனை நம்பி ஏமாந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொன்று புத்தகப் பையில் மறைத்து வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் கட்டப்பனை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். நாளடைவில் இவர்கள் இருவரும் தனிமையில் இருக்க அந்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளார்.

இதை அடுத்து காதலனை வரவழைத்த மாணவி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இது வெளியில் தெரிந்தால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் அவமானம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அந்த காதலனை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த காதலன் மாணவி கர்ப்பம் அடைந்ததை கேட்டு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவி இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாமலும், கர்ப்பத்தை கலைக்க வழி தெரியாமலும் விடுதியிலேயே வேதனையுடன் காலத்தை கடத்தி வந்தார். பின்னர் குறைபிரசவத்தில் 6 மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தையை கொலை செய்து தன்னுடைய புத்தகப் பையில் ஒரு பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்துள்ளார்.

இதற்கு அப்புறம் குழந்தையின் சடலத்தை எப்படியாவது அப்புறப்படுத்தவேண்டும் என்பதற்காக தோழியின் உதவியை நாடியுள்ளார். தான் காதலனை நம்பி ஏமாந்துவிட்டதாகவும், அவனால் உருவான குழந்தை இறந்தே பிறந்ததாகவும் எனவே அதை அப்புறப்படுத்த உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து குழந்தையின் சடலம் புத்தகப் பையில் இருந்த போட்டோவை வாட்ஸ்ஆப்பில் பார்த்த தோழி அதிர்ச்சி அடைந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தது. குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்ததில் குழந்தை பால் குடித்த பிறகுதான் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது குழந்தை இறந்தே பிறக்கவில்லை என்பதும் மூச்சுத் திணறியும், கழுத்து நெரிக்கப்பட்டும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டார். பள்ளிக்கு வரும் பெண்களின் செல்போன் இருக்கிறதா என்று சோதனை செய்து வரும் இந்த காலத்தில் குழந்தை ஏதாவது இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.