ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடல்! மது அடிமைகளுக்கு டாக்டர் பரிந்துரைத்தால் மதுபானம்..! முதலமைச்சர் அதிரடி!

கொரோனா வைரஸினால் மது கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்ட நிலையில் கேரளா மாநிலத்தில் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூந்நிலையில், அம்மாநிலத்தின் முதலவர் டாக்டரின் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


உலக முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் அதிகமாகி கொண்டு இருக்க. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கின்றது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடி பிறப்பித்தனர்.

இந்த உத்தரவின் பெயரில், மக்கள் தங்கள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடர்ந்து செயல்படுகின்றன. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியே வெளியே வந்தாலும் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் சற்று அதிகமாகவே தொற்றின் காரணம் அதிகமாக உள்ளது. ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மது கடைகள் மூடப்பட்ட நிலையில், கேரளாவில் உள்ள மது பிரியர்கள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்திருப்பதாக செய்திகள் தெரியவந்துள்ளது.

இது குறித்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானங்கள் வழங்கலாம் என கலால் துறைக்கு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் உத்தரவில் மதுவை கைவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கவும், அவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி மதுபானம் என்பது மது பிரியர்களுக்கு ஒரு அத்தியவசிய பொருள் போன்று ஆயிற்று.

அதனால் இந்த பிரச்சனை சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அரசு நேரடி கொள்முதலில் இருந்து ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக கேரளா அரசு பரிசீலித்து வருகின்றது. சமூக பிரச்சனைகள் வரமால் தடுப்பதற்கு இந்த முறை மிகவும் வரவேற்கதக்கது என்று மக்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.