சிக்கன் ரோஸ்ட்! மட்டன் கிரேவி! சாப்பிட்ட மறுநிமிடம் வாந்தி, வயிற்று வலி! மூடப்பட்ட புஹாரி ஓட்டல்! லைசென்சும் ரத்து!

திருவனந்தபுரம்: புஹாரி ஓட்டலில் சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.


கேரள மாநிலம் திருவனந்தபுரம், அத்தகுலாங்கரா பகுதியில் செயல்படும் புஹாரி ஓட்டலில் தரக்குறைவான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. அந்த ஓட்டலில் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 5 குழந்தைகள் உள்பட 6 பேருக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  

இதன்பேரில், திருவனந்தபுரம் கார்ப்பரேஷனுக்கு புகார் செய்யப்பட்டது. கார்ப்பரேஷன் உத்தரவின்பேரில், புஹாரி ஓட்டலில் சுகாதாரத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் தரக்குறைவான பொருட்கள் விற்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, புஹாரி ஓட்டலின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டனர். அத்துடன், ஓட்டல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.