கவுசல்யாவின் 2வது கணவர் மீது பரபரப்பு பாலியல் புகார்! விரைவில் வெளியாகிறது ஆடியோ ஆதாரம்!

ஆணவக் கொலைக்கு பலியான உடுமலை சங்கரின் மனைவி காதலித்து மறு மணம் செய்து கொண்ட நபர் மீது பரபரப்பு பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.


தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பில் தீவிரமாக இயங்கி வருபவர் ஜெ ஜீவானந்தம். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கவுசல்யா – சக்தி திருமணம் குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.


சக்தி (கவுசல்யாவின் 2வது கணவர்) மீது பாலியல் புகார் கூறிய ஜீவானந்தம்...

அந்த பேஸ்புக் பதிவில் ஜீவானந்தம் கூறியுள்ளதாவது: நிமிர்வு கலையகம் எனும் பண்பாட்டு மையத்தின் ஆசான் என்று கூறிக் கொள்பவர் சக்தி (கவுசல்யாவின் 2வது கணவர்). அவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

   நிமிர்வு கலையகத்தில் உள்ள பெண்கள் சக்தியால் பாதிக்கப்பட்டதை தங்களுக்கு உள்ளாக மட்டுமே பேசிக் கொண்டனர். யாரும் வெளியில் சொல்ல முன்வரவில்லை. இந்த நிலையில் தான் ஒரு பெண் துணிந்து முன் வந்து சக்தி (கவுசல்யாவின் 2வது கணவர்) மீது பாலியல் புகார் கூறினார். ஏன் நிமிர்வு கலையகம் சார்ந்த திருநங்க ஒருவர் கூட சக்தி ((கவுசல்யாவின் 2வது கணவர்) மீது பாலியல் புகார் தெரிவித்தார்.   பாலியல் புகார் கூறிய பெண்களிடன் புகாருக்கு என்ன ஆதாரம் என்று நிமிர்வு கலையக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் வேறு வழியில்லாமல் கண்துடைப்பிற்காக சக்தி (கவுசல்யாவின் 2வது கணவர்) நிமிர்வு கலையகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதன் பிறகு புகார் கூறிய பெண்களின் நடத்தையை சுட்டிக்காட்டி நிமிர்வு கலையகத்தில் சக்தி மீண்டும் இணைந்து கொண்டார்.

   சக்தி (கவுசல்யாவின் 2வது கணவர்) மீது பாலியல் புகார் கூறிய பெண்ணும், திருநங்கையும், சக்தியின் மனைவி கவுசல்யாவும் பேசிய செல்போன் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆடியோ நிமிர்வு கலையக உறுப்பினர்களிடம் தற்போதும் உள்ளது. விரைவில் அது பொதுவெளியில் கூட வெளியாகலாம்.

   இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் ஜெ ஜீவானந்த் கூறியுள்ளார்.