கதிர்காமு பலான வீடியோவில் இருக்கும் பொண்ணு யாரு தெரியுமா? இது வெற்றிக்கு அறிகுறியா?

கடந்த தேர்தலில் தி.மு.க. அமைச்சர் பெரியகருப்பன் பற்றி செக்ஸ் வீடியோ ஒன்று வெளியானது.


ஆனால், அந்தத் தேர்தலில் அவர் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி பெற்றார். அதேபோல் இப்போது பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு பற்றி பலான வீடியோ வெளிவந்திருப்பதால், அவரது வெற்றி உறுதி என்று சொல்கின்றனர் தினகரன் ஆட்கள்.

இந்த நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் பெண், கதிர்காமுவுக்கு மிகவும் இணக்கமாக இருப்பதால், எப்படி புகார் கொடுத்தது என்று கேள்வி எழுப்பினோம். அப்போதுதான் பல தகவல்களைக் கொட்டினார்கள்.

அதாவது வீடியோவில் இருக்கும் பெண்ணும் புகார் கொடுத்திருக்கும் பெண்ணும் வேறு ஆட்களாம். வீடியோவில் உள்ள பெண் கதிர்காமு மருத்துவமனையில் நர்ஸ் வேலை செய்தவராம். அவரை கணக்குபண்ணி சின்ன வீடாக செட்டப் செய்துகொண்டார் என்று சொல்கிறார்கள்.

ஆனால், கதிர்காமு மீது புகார் செய்திருக்கும் பெண் வேறு ஒருவர். அவர் சிகிச்சைக்குப் போன என்னை கற்பழித்துவிட்டதாக புகார் கூறியிருக்கிறாராம்.   மேலும் வீடியோ எடுத்துவைத்து மிரட்டுவதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த புகாருக்கு ஏற்ப பழைய வீடியோவை தூசு தட்டி வெளியிட்டது அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க்தானாம்.

ஆனால், இதைக் கண்டு டென்ஷனாகாத தினகரன் டீம், நாங்க ஜெயிக்கிறதுக்கு அறிகுறி என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும் ஜெயக்குமார் பற்றிய வீடியோ ஒன்றும் வெளியிட இருக்கிறார்களாம். ஜெயகுமாருக்கு மகன் பிறந்ததையே அவர் கண்டுகொள்ளவில்லை, இதை பார்த்தா டென்ஷன் ஆகப்போகிறார்.