கதிர் ஆனந்த் வேட்புமனு தள்ளுபடியாகிறது! அதிமுக ஐ.டி. டீம் அதிரடி! ஆனந்தத்தில் ஏ.சி.சண்முகம் !

தன்னுடைய மகனை நாடாளுமன்றத்தில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட துரைமுருகன், எத்தனையோ உள்ளடி வேலை பார்த்து ஒருவழியாக கதிர் ஆனந்தை வேட்பாளராக மாற்றினார்.


ஆனால், சமீபத்தில் நடந்த ரெய்டு விவகாரம் அவரது வேட்பாளர் விவகாரத்துக்கே சிக்கல் உருவாக்கும்போல் தெரிகிறது. இரண்டாவது நாளாக நடைபெறும் ரெய்டில் 2-0 கோடிக்கும் மேலாகக் கிடைத்துள்ளது. மேலும் இரண்டு நாட்கள் ரெய்டு நடைபெறும் என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கணக்கு காட்டாமல் கோடிகளை பதுக்கியிருக்கும் கதிர் ஆனந்த், தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாக்கவேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுத இருக்கிறார்களாம் தமிழ்நாடு வருமான வரித்துறையினர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், கடைசி நேரத்தில்கூட, வேட்பாளர் பட்டியலில் இருந்து கதிர் ஆனந்த் பெயர் நீக்கப்படலாம். என்பதால் போட்டி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் செம குஷியில் இருக்கிறார்.

ஏன் இப்படி தி.மு.க.வை மட்டும் விரட்டி விரட்டி வைச்சு செய்கிறீர்கள் என்று ஐ.டி. துறையிடம் பேசியபோது, ‘துரைமுருகனும் ஸ்டாலினும் எங்களை ரொம்பவும் அவமானப்படுத்திட்டாங்க... நாங்க யாருன்னு காட்ட வேண்டாமா என்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு போட்டிபோடாமலே ஒண்ணு அவுட்டா?