அத்திவரதர் புண்ணியத்தில் எம்பியான கதிர் ஆனந்த்! வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சுவாரஸ்யம்!

கடைசி வரை நெக் டூ நெக்காக சென்று கொண்டிருந்த வேலூர் தேர்தல் முடிவுகளில் கடைசியாக கூடுதல் வாக்குகளுடன் கதிர் ஆனந்த் ஜெயித்ததற்கு அத்திவரதர் தான் காரணம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.


தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த மறுநாள் யாரும் எதிர்பாராத வகையில் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்துவிட்டு திரும்பினார் கதிர் ஆனந்த். துரைமுருகன் திராவிட பகுத்தறிவு இயக்கத்தின் வழி வந்த மிகப்பெரிய இயக்கமான திமுகவின் முதுபெரும் தலைவர்.

அவரது மகனான கதிர் ஆனந்த் சிறுவயது முதலே அவரது தாயை போல் இறை நம்பிக்கை கொண்டவர். கதிர் ஆனந்தை எப்போதும் நெற்றியில் குங்கும், சந்தனத்துடன் தான் பார்க்க முடியும். அந்த அளவிற்கு அவர் பக்தி மான்.

எனவே தான் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  போது அத்திவரதரை தரிசித்துவீண் சர்ச்சையில் சிக்க அவர் விரும்பவில்லை. இதனால் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த மறுநாள் அதாவது கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்து திரும்பினார்.

இதன் பிறகு கடந்த வெள்ளியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. துவக்கத்தில் பின்னடைவில் இருந்து வந்த கதிர் ஆனந்த் திடீரென முன்னிலை பெற்றதுடன் வெற்றி வாகையும் சூடினார். 

இதற்கு அவர் கடந்த வாரம் அத்திவரதரை தரிசித்து திரும்பியது தான் காரணம் என்று வாக்கு எண்ணும் மையத்தில் கதிர் ஆனந்துடன் இருந்த சிலரே பேசிக் கொண்டனர். மேலும் காலையில் வீட்டில் இருந்து புறப்படும் போதே அத்திவரதர் தரிசனத்தின் போது கொடுத்த திருநீரு, சந்தனம் போன்றவற்றை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு தான் கதிர் ஆனந்த் கிளம்பியதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ கடைசியில் தன்னை வந்து தரிசித்த கதிர் ஆனந்ததிற்கு கடைசியில் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார் அத்திவரதர். ஆனால் ஏசிஎஸ் பக்திமானாக இருந்தாலும் அத்திவரதரை சென்று தரிசிக்கவே இல்லை. எனவே தான் அவர் தோற்றுவிட்டார் போலும்.