காசுக்கு கஷ்டப்படுகிறேன்! அண்ணாச்சியை நினைத்து புலம்பும் ஜீவஜோதி!

அண்ணாச்சியின் விபரீத ஆசையால் இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை கருகிப் போயுள்ளது.


எதுவெல்லாம் நடக்கக்கூடாதோ, அதுவெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துவிட்டது என்று வேதனைப்படுகிறார் ஜீவஜோதி. சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் விஷயத்தில் என்னை ஆசை நாயகி, அந்தப்புர அழகி என்றெல்லாம் எழுதி கேவப்படுத்துகிறார்கள் என்று அழுகிறார் ஜீவஜோதி.

நான் ஆசைப்பட்டு கட்டிக்கொண்ட பிரின்ஸ் கொலை செய்யப்பட்ட விவகாரம் எனக்கு எத்தனை அதிர்ச்சி கொடுத்திருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. அதன்பிறகு நான் ஒருபோதும் அண்ணாச்சிக்கு விலை போகவில்லை.

நானே கஷ்டப்பட்டு இட்லி கடை வைத்துத்தான் பிழைப்பு நடத்தினேன். இப்போது எழுதுவது உண்மை என்றால், நான் எதற்காக ஹோட்டல் வைத்து இரவும் பகலுமாக கஷ்டப்படப் போகிறேன். என்னைப் பார்க்க உங்களுக்கு பாவமாக இல்லையா என்று நிருபர்களிடம் கண்ணீர் சிந்துகிறார்.

அண்ணாச்சி செய்த தப்புக்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. அது எனக்கு போதும். கடைசியில் நியாயம் வென்று இருக்கிறது. ஆனால், இப்போது நான் அந்த வழக்கு குறித்து பேசவும் விரும்பவில்லை. அண்ணாச்சியையும் அந்த சம்பவத்தையும் மறந்தேவிட்டேன் என்கிறார். 

அண்ணாச்சி ஆசையால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கருகிப்போனது பரிதாபம்தான். என்ன நடக்கிறது என்று பொறுமையாக பார்க்கலாம்.