மீண்டும் மோடிதான் பிரதமர்! கங்கை படகோட்டிகளின் சுளீர் கணிப்பு!

கடந்த 2014 தேர்தலில்... கங்கை படகு ஓட்டிகள் தெரிவித்திருந்த கருத்துப்படி மோடி வெற்றி பெறுவார் என்று தெரிவித்தனர். அப்படியேதான் நடந்தது. அதேபோன்று இந்த 2019ம் தேர்தலிலும் மோடிதான் பிரதமாராவார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.


எப்படி இவர்கள் கணிக்கிறார்கள்?

கங்கையில் புனித நீராட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். இந்த மக்கள் பல்வேறு ஜாதிகளை, பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். . ஏழை, நடுத்தர, வசதி உள்ள மக்கள் என பலரும் குடும்பம் குடும்பமாக கங்கையில் புனித நீராட வருகின்றனர்.

கங்கையின் படகு ஓட்டிகள்தான் இத்தனை தரப்பு மக்களையும் அழைத்துச்சென்று வருகின்றனர். அப்போது அனைத்து மக்களிடம் மனம் திறந்து பேசுகிறார்கள். அப்படி சந்தித்த மக்கள்தான் மோடியின் மீது பெருத்த நம்பிக்கை வைத்திருக்கிறார்களாம். எங்கள் வாக்கு பொய்க்கவே செய்யாது என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்.

இந்த முறையும் 2019 தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமின்றி, நிச்சயம் பெரும்பான்மை இடத்தையும் மோடி பிடித்துவிடுவாராம். ஜஸ்ட் வெயிட், இன்னும் நாலே நாட்களில் படகோட்டிகளின் வாக்கின் தன்மை தெரிந்துவிடப் போகிறது.