பாதாம், பிஸ்தா சாப்பிட்டு உடம்பை வளர்த்து வச்சிருக்கேன்..! லீக்கான நாகர்கோவில் காசியின் செல்போன் ஆடியோ!

பெண்களை காதல் வலையில் வீழ்த்தி 80 மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காமுகன் காசி பேசிய செல்போன் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் காசி பாதாம், பிஸ்தா சாப்பிட்டு உடம்பை வளர்த்து வச்சிருக்கேன் பெண்களுக்காக அடுத்தவருடன் சண்டையிட்டு ரத்தம் சிந்தினால் தனக்கு நஷ்டம் என்று செல்போன் ஆடியோவில் பேசியுள்ளான். இந்த ஆடியோ மூலம் பணம் பறிப்புக்கு உதவிய கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் கணேசபுரத்தை சேர்ந்த காமுகன் காசி, சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைதளங்கல் மூலம் பழகி ஏமாற்றி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை தற்போது காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

காமுகன் காசி பல பெண்களை ஏமாற்றியதை அந்த பெண்களே புகார்களும் அளித்துள்ளனர். இது தொடர்பான பல ஆதாரங்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த கொடூர காசியின் தந்தை தங்கபாண்டியன் தனது மகன் அப்பாவி என்றும் அவனை காவல்துறையினர் சுட்டுக்கொல்ல முயற்சிப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், காவல் நிலையத்தில் காமுகன் காசி மீது மேலும், இரு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறிஉள்ளது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர்களில் அளித்த புகாருடன் சேர்த்து ஆதாரத்தையும் அளித்துள்ளனர். அதில் காசி என்னமாதிரியெல்லம் ஏமாற்றி பேசி மயக்கி, தங்களிடம் மிரட்டி பணம் பறித்தான் என்பதற்கு ஆதாரமான குரல் பதிவுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அவர்கள் கொடுத்த அந்த ஆடியோ குரல் பதிவில், காமுகன் காசி தனது கூட்டாளிகளிடம், பெண்கள் தாங்களாகவே வந்து பணத்தை கொடுத்து ஏமாந்து சென்றதாக தெரிவித்துள்ளான். அதுமட்டுமின்றி, தான் பாதம் பிஸ்தா சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருப்பதாகவும், பெண்களுக்காக அடுத்தவருடன் சண்டையிட்டு ரத்தம் சிந்தினால் தனக்கு நஷ்டம் என்றும் தெரிவித்துள்ளான்.

காமுகன் காசி கூட்டாளியிடம், தன்னிடம் உள்ள பெண்களின் செல் நம்பரை தந்தால் அவர்களை வசியப்படுத்துவது உங்கள் திறமை என்றும் சவால் விட்டுள்ளான். இடையில், தனக்கு எதிராக பல பெண்கள் புகாரளிக்க தயாராகி வருவதை அறிந்த காசி, கூட்டாளிகளிடம் போட்டோ மற்றும் குரல் பதிவு எல்லாம் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூட்டாளிகளை சமாதானப்படுத்தியும் இருக்கிறான்.

இந்த குரல பதிவை அடுத்து காவல்துறையினர் காசியின் பணம் பறிப்பு மோசடிக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளில் முக்கியமானவனான கல்லூரி மாணவன் டைசன் ஜூனோவை அதிரடியாக கைது செய்தனர். விசாரணௌ மேற்கொண்டுள்ளனர். அதில் மேலும் இரு கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

காமுகன் காசி பிரச்சணை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் காசிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, காசி வழக்கை சிபிசிஐடி குற்றபிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மாதர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.