என்னையும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுறான்..! நாகர்கோவில் காசி விவாகாரத்தில் நேற்று பெண் டாக்டர்..! இன்று பெண் என்ஜினியர்.! பரபர ரிப்போர்ட்!

நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்த காம கொடூரன் காசியை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் பல அரசியல் பிரமுகர்கள் சம்பந்தம் உள்ளதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை யாரையும் விட்டு வைக்காத காம கொடூரன் காசி நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவன். 26 வயது கொண்ட காசி சென்னையில் பிஏ படித்தபோது, ஒரு பெண் மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் காதலாக மாறி பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கினர். அந்த பழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார் காசி. பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்த அந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டார். 

கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக பெண் மருத்துவரிடம் கூறி ஏமாற்றி, படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு சென்று உள்ளார் காசி. ஊருக்கு சென்ற காசி தனது அப்பாவின் கோழிக்கடையை கவனித்து வந்துள்ளார். அப்போதுதான் முதல் பெண் மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துள்ளர்.

   பணம் தரவில்லையென்றால் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களை சமூக வளைதளங்களில் பரப்பி விடுவதாகவும் சொல்லி மிரட்டி உள்ளார். சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பரித்துள்ளார் காசி. பின்னர் பெண் மருத்துவர் ஒரு கட்டத்தில் தொந்தரவு அதிகமாகவும், பணம் தருவதை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த காசி, பெண் மருத்துவரின் ஆபாச படங்கள், வீடியோவை, சமூக வளைதளக்களில் பதிவு செய்ய ஆரம்பித்தார். அது அவரால் போலியாக உருவாக்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் ஆகும். இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண் மருத்துவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் காசியை கைது செய்து விசாரணையும் செய்ய தொடங்கினர்.

அந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின அதில்,காசி தினமும் காலையில் கடையில் வேலை செய்து விட்டு பின்னர் வேலை முடிந்தபிறகு சமூக வளைதளங்களில் மூழ்கிவிடுவாராம். ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார்.

பெண்ணியம் குறித்த கருத்துக்களை முகநூலில் பதிவிட, இந்த கருத்துகக்ள பார்த்து பல பெண்கள் காசியிடம் விழுந்து உள்ளார்கள். அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி நெருக்கம் காட்டி அந்த வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்து வந்துள்ளார் காசி.

விசாரணையை அடுத்து, காவல்துறையினர் கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ந்தனர்.

மேலும் காசியுடன் உள்ள ஆண் நண்பர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு, அவர்களுக்கும் இந்த ஆபாச வீடியோ, போட்டோக்களும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில், அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர் . சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர். அப்போதுதான் காசிக்கு சில அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது .அவர்கள் யார் என்ற விசாரணையும் நடக்கிறது.

இந்நிலையில், பெண் மருத்துவர் மட்டுமே புகார் கொடுத்தநிலையில், தப்போது இன்னொரு பெண்ணும் புகார் தந்துள்ளார். அப்போது டாக்டர் என்றால் இப்போது 25 மதிக்கத்தக்க அந்த பெண் ஒரு என்ஜினியர். ஆனால் அந்த பெண் ஆன்லைனில்தான் இந்த புகாரை எஸ்பி ஆபீசுக்கு அனுப்பு உள்ளார்.

 அந்த புகாரில் "காசியிடம் இரண்டரை வருடமாக பழகினேன்! நெருக்மாக இருதோம்! அப்போது என்னை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டான் இவனை தானே கல்யாணம் செய்ய போகிறேன் என்று நினைத்து சும்மா இருந்து விட்டேன்! இதற்கு பிறகு ஏதோ அவசர தேவைக்காக என்னிடம் நகை வாங்கினான். கொஞ்ச நாள் கழித்து அந்த நகையை நான் திருப்பி கேட்டபோதுதான் எனக்கு சுயசுரூபம் தெரியவந்தது.

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டவும், விலகியும் விட்டேன். காசி மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். என்று புகாரில் தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து, இந்த இந்த புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர், காசியின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை ஏமாற்றிய காம கொடூரன் காசி அரசியல் தொடர்பும் இருப்பதால் விவகாரம் பெரிதாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த செய்தி அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.