மோடி தலைமையில் அழிவை நோக்கி செல்கிறது இந்தியா! நடிகர் சித்தார்த் துணிச்சல் ட்வீட்! கொந்தளிக்கும் பக்தாஸ்!

காஷ்மீர் விவகாரத்தில் இருவேறு துருவங்களாக பதிலளித்த நடிகர் சித்தார்த், நடிகை அமலா பால் ஆகியோரின் கருத்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு  மத்தியில் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதா நிரவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மக்களவையிலும் 327 ஆதரவோடும், 72 எதிர்ப்புகளோடும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு ஆதரவையும், எதிர்ப்பையும் பல்வேறு பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் இது மிக துணிச்சலான முடிவென்றும், இது போன்ற முடிகளை பிரதமர் மோடியால் மட்டுமே எடுக்க முடியுமென்றும் தெரிவித்தார். 

நாடு நலம் பெற வேண்டிக்கொள்கிறேன் என்றும் அமலா பால் தெரிவித்தார். இவரை தொடர்ந்து எதிர் கருத்தை பதிவு செய்த நடிகர் சித்தார்த் இந்த நாடு மோசமான தலைமை ஒன்றில் கீழ் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரின் கருத்தும் சமூக வலைத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.