கைக்குழந்தையை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்! பிறகு எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

கரூரில் 11 மாத கை குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.


கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் மனோ பிரியா. இவருக்கும் செவந்தம்பாளையத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் திருமணமாக 11 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

மகேஷ் பெங்களூரில் வசித்து வந்த நிலையில் மனைவி மனோ பிரியா மட்டும் செவந்தம்பாளையத்தில் குழந்தையுடன் வசித்து வந்தார். தன்னையும் பெங்களூர் அழைத்துச் செல்லும்படி கணவர் மகேசை பல முறை மனோ பிரியா வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் மகேஷ் தொடர்ந்து பெங்களூரில் இருந்தபடியே பணியை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கணவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மனைவி மனோ பிரியா தன்னை பெங்களூர் அழைத்துச் செல்லுமாறு மீண்டும் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்க மகேஷ் மறுத்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த மனோ பிரியா இன்று காலை தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வாங்கல் பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் யாரும் இல்லாத நிலையில் தனது 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் மனோ பிரியா.

பிறகு தானும் தூக்கிட்டு மனோ பிரியா தற்கொலை செய்துகொண்டார். கணவர் தன்னை பெங்களூர் அழைத்துச் செல்லாத காரணத்தினால் மகளுடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.