13 வயது சிறுமி..! வாடகை வீடு..! விபச்சாரம்..! வசமாக சிக்கிய திருப்பூர் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

13 வயது சிறுமியை கடத்திச்சென்று போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கயவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2017ம் ஆண்டு கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் 13 வயது சிறுமிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக திருப்பூருக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு போதை பழக்கத்தை திணித்துள்ளார். பின்னர் சிறுமிக்கு போதை ஏறியவுடன் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி உள்ளார்.

மகள் காணாமல் போய்விட்டதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் கலைச்செல்விதான் பிரதான குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கரூர் நீதிமன்ற நீதிபதி சசிகலா, கலைச்செல்வி, குமுதவல்லி, கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சிவக்குமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார் .

சந்தானமேரி, பிரதாப் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். கலைச்செல்விக்கு ரூ.1.60 லட்சம் ஆயிரம் அபராதமும் குமுதவல்லி, கல்பனா மணி ஆகியோருக்கு ரூ.1.35 லட்சம் அபராதமும், சிவகுமாருக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரே வழக்கில் 3 பெண்களுக்கு ஆயுளும், ஒரு ஆணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பல லட்சம் ரூபாய் அபராதமும் என அதிரடியாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.