கந்தசஷ்டி கவசத்தை அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்த கறுப்பர் கூட்டத்தினர் அத்தனை பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

அந்த வகையில், இன்று கறுப்பர் கூட்டத்தின் சுரேந்திரன் குண்டர் சட்டம் பாய்ந்தது. கந்தசஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் சுரேந்திரன் மற்றும் செந்தில் வாசன் ஆகியோர் இம்மாதம் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த நிலையில்தான் இன்று சுரேந்திரனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கு சென்னை மாநகர காவல் துறை அணையர் மகேஷ்குமார் அகர்வால் மீது உத்தரவு போட்டுள்ளார். இந்த உத்தரவின் கீழ் செந்தில்வாசனும் கைது செய்யப்பட வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், இவர்களுக்கு பணம் கொடுத்து உதவிய தி.மு.க.வினரையும் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.