ராஜீவ் கொலை விவகாரத்தில் சிக்கிய கருணாநிதி! வைரலாகும் ராஜீவ் அணிந்திருந்த குர்தா!

ராஜீவ் காந்தி மரணத்தை பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் இழுத்துவிட்டதையடுத்து காங்கிரஸ் புள்ளிகளைவிட, தி.மு.க.வினர் அதிகம் எதிர்வினை ஆற்றினார்கள். தி.மு.க.வின் ஐ.டி.விங்கும் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தது.


இதனால் டென்ஷன் ஆகியிருக்கும் மோடியின் படை அடுத்தகட்ட தகராறுக்கு வந்துவிட்டது. ராஜீவ் காந்தி அஸ்தி ராமேஸ்வரம் செல்லும்வழியாக சென்னை வந்தபோது, கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. அந்த அளவுக்கு ராஜீவ் மீது வெறுப்பில் இருந்தார் கருணாநிதி என்று பழைய பஞ்சாயத்தை இழுத்துவிட்டு, அப்படிப்பட்ட தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது என்று கிண்டல் செய்துவருகிறார்கள்.

இந்த விவகாரத்திற்கு எந்த பதிலும் தெரிவிக்க வேண்டாம் என்று ஐ.டி. விங்கிற்கு தி.மு.க. உத்தரவு போட்டுள்ளதாம்.  ஏனென்றால், அந்த நேரத்து விவகாரத்தை நோண்ட ஆரம்பித்தால், அதைவிட வேறு பல சிக்கல்கள் வந்துசேரும். அதனால், அதற்கு பதிலடியாக ராஜீவ் காந்தி மரணம் அடைந்தபோது, அவர் உடலில் இருந்த சல்லடையாக துளைக்கப்பட்ட ஆடையை வைரலாக பரப்பிவருகின்றனர். இப்படியொரு தியாகத் தலைவன் மீது விமர்சனம் வைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். நல்லாத்தான் அரசியல் பண்றாங்க.