பிரதமர் மோடியை உயிரோடு கொளுத்த தேடிக்கொண்டிருப்பதாக இயக்குநர் கரு பழனியப்பன் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
மோடியை உயிரோடு கொளுத்த தேடிக் கொண்டிருக்கிறேன்! இயக்குனர் கரு பழனியப்பன் பகீர்!

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுபவர் சு வெங்கடேசன். எழுத்தாளரான வெங்கடேசன் இயக்குனர் பழனியப்பனுக்கு நெருங்கிய நண்பர். இதனை முன்னிட்டு தனக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு கரு பழனியப்பனை மதுரைக்கு அழைத்து வந்துள்ளார் வெங்கடேசன்.
மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கரு பழனியப்பன் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு தோல்வியடைந்த திட்டம் என்று கரு பழனியப்பன் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட தொகைக்கு ஈடான தொகை வங்கிக்கு வந்து விட்டதாகவும் இதற்காக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சுமார் 2100 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது தான் மிச்சம் என்றும் கரு பழனியப்பன் தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே 50 நாட்கள் மட்டும் தனக்கு நேரம் கொடுக்குமாறு பிரதமர் மோடி கேட்டதாகவும் அதற்கு அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விடுவதாக மோடி உறுதி அளித்ததாகவும் அப்படிப் பார்க்கவில்லை என்றால் தன்னை உயிரோடு கொளுத்த லாம் என்று மோடி கூறியதாகவும் கரு பழனியப்பன் தெரிவித்தார். அன்று முதல் மோடியைத்தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அவர் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் கரு பழனியப்பன்
பிரதமர் மோடியை உயிரோடு கொளுத்த தேடிக்கொண்டிருப்பதாக கரு பழனியப்பன் கூறியுள்ளது பாஜகவினரை பத்திரம் அடைய வைத்துள்ளது. விரைவில் அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.