பாரதிராஜாவுடன் மோதும் கரு.பழனியப்பன்! ஆர்.கே.செல்வமணிக்கு ஆப்பு?

இயக்குனர் சங்க தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று- இயக்குநர் கரு. பழனியப்பன் குரல் கொடுத்திருக்கும் விவகாரம், சினிமா உலகை அதிர வைத்துள்ளது.


பாரதிராஜாவால்தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது, அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை என்ற- இயக்குநர் கரு.பழனியப்பன், கண்டிப்பாக தேர்தல் நடத்தித்தான் தலைவரை தேர்வு செய்யவேண்டும் என்று குரல் கொடுத்தார். அதனால் சங்க உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, செல்வமணி டென்ஷன் ஆகியுள்ளார்.

பாரதராஜா போட்டியின்றி தலைவர் பதவிக்கு வந்துவிட்டால், செல்வமணிதான் எல்லா பணிகளையும் செய்துமுடிப்பார், செல்வமணிதான் ஆக்டிங் தலைவராக இருப்பார் என்பதாலே, தேர்தலை வலியுறுத்தியிருக்கிறார் கரு.பழனியப்பன். உடனே பாரதிராஜாவுக்கு ஆதரவாக ஒரு கும்பல் கிளம்பி, அவரை இந்திரன் சந்திரன் என்று பாராட்டி, அவரை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுதான் பாரதிராஜாவுக்கு ஆதரவாக உலாவரும் அறிக்கை. 

தமிழ் சினிமா ரசிகனை, கலைஞனை இளைஞனை  சினிமா இயக்குநராக ஆவதற்கு கிராமத்திலிருந்து நகரத்திற்கு ஈர்த்த மானசீக குரு, வழிகாட்டி, முன்னோடி.. தமிழ் சினிமாவின் அடையாளம். அவர் இயக்குநர்கள் சங்கத்தின் மிகப் பெரிய கௌரவம்.  சொத்து. இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக அவர் இரும்பது நமது பெருமிதம், வளர்ச்சி... இயக்குநர்கள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் வேண்டுமென உதவி இயக்குநர்கள் குரல் கொடுத்தபோது டி40 நிகழ்ச்சி நடத்தி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி சேர்த்தது இயக்குநர் இமயத்தால்தான்.

 அந்த டி40 நிகழ்ச்சி நடத்திட, சங்கத்தின் தளபதியாக சாரதியாக இருந்து சாதித்தவர் சங்கத்தின் செயலாளரான ஆர்.கே. செல்வமணி. பாரதிராஜா வேறு செல்வமணி வேறல்ல. இருவரும் சிவசக்தி. டி40 நிகழ்ச்சியில் ரஜினியும், கமலும், பாலச்சந்தரும் கலந்து கொள்ள காரணமானவர். இவரது அழைப்பே பிரபலங்களை நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது.  இன்றைக்கு இயக்குநர்கள் சங்கம் சொந்தக் கட்டிடத்தில் இயங்க அந்நிகழ்ச்சியின் வருவாயே காரணம். அது கூட்டு முயற்சி என்பவர்கள் அது போன்று ஒரு நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திக் காட்டட்டும். 

மறுபடியும் டி50 நடத்தி சங்க உறுப்பினர்களுக்கு இடம் வாங்கித் தர உதவி இயக்குநர்களின் காவலன் விக்ரமன் முயன்றார். அவரது சொந்தக் காரணங்களால் அவரால் அதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே நடந்த முடிந்தது. அதை செல்வமணி அவர்கள் மட்டுமே நிகழ்த்த முடியுமென முன் மொழிந்தார்.  செல்வமணி அவர்களுக்கு பாரதிராஜா தலைமையே அதற்கு உகந்தது என தெரியும். ஆகவே அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைமை ஏற்க செய்ய இயக்குநர்கள் சங்கத்திற்கு அழைத்து வந்தார்.

முறைப்படி தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்பது நியாயம் என்றாலும், பாரதிராஜா வருவதற்கு ஒப்புக் கொண்ட பின்பு தேர்தல் எதற்கு? நீதிப்படி இல்லையென்றாலும் தர்மப்படி சரியானதே. அவருக்கு எதிராக நிற்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் அற்பர்கள். அந்த அற்பர்களே அவரை தேர்ந்தெடுத்தது முதலில் சரியென்றார்கள். தாங்கள் சங்கத்திலிருந்தபோது யாதொன்றும் செய்யாத தலைவர்கள் அவர்கள். இருந்த கஜானாவை காலி செய்துவிட்டு, உறுப்பினர்களுக்கு படம் போடும் ஏழை இயக்குநரிடம் 10,000 ரூபாய் பறித்த நல்லவர்கள் அவர்கள். சங்க நிர்வாகத்தில் இடம் பெற பேரம் பேசிய போது பாரதிராஜாவின் தலைமை ஓகே. சீட்டு பேச்சுவார்த்தை முறிவுற்றதும் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டது தவறாம்.?

தேர்தல் அதிகாரியே வெளியே போ.. சங்கத்தைப் பூட்டுவேன் என்று கூறலாமா? 2400 பேர் உறுப்பினர்களாக உள்ள சங்கத்தில் இப்படி நடப்பது சரியா? தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிம்மதியில்லாமல் செய்த காஞ்சி காமாட்சிக்கு இயக்குநர்கள் சங்கத்தில் என்ன வேலை? இமயத்தின் அலுவலகத்தில் அமர்ந்து பதவியை விட்டு விலகிவிடுங்கள் இல்லையேல் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அசிங்கப்படுத்துவேன் என்று அவரை அவமானப்படுத்தியது சரியா?

மேனேஜர் ரங்கனை மிரட்டி பாரதிராஜாவிடம் பேச வைத்து  பதவி விலகாவிடில் கேஸ் போடுவார்களாம். கோரட்டில் ஆள் நிற்கிறது என்று  பிளாக்மெயில் செய்த கருப்பு ஆடு எது? சங்கத்தின் வாழ்வை, உறுப்பினர்களின் எதிர்காலத்தை பாழாக்கிய படுபாதகர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அட, போட்டின்னு வந்திருச்சுல்ல, களத்துல இறங்குங்கப்பா...