அதிமுக கூட்டணிக்கு பிரபல நடிகர் திடீர் ஆதரவு! தென்மாவட்ட வாக்கு வங்கிக்கு குறி!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்வேன் என்று நாடாளும் மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.


அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் தனது ஆதரவை நடிகரும், நாடாளும் மக்கள் கட்சி தலைவருமான கர்த்தக் தெரிவித்தார்.  அப்போது தேர்தலில் அதிமுக கூட்டடணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக கார்த்தி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் ஆதரவு அதிமுகவுக்கு தான் என்றார். 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதாரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக கார்த்தி தெரிவித்தார். அதிமுகவுக்கு ஆதரவு மட்டுமா, இல்லை கட்சியை இணைத்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு, அதற்கான பதிலை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் கவரப்பட்டே தான் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கார்த்தி கூறினார். தேர்தல் சமயத்தில் இப்படி பிரச்சாரத்திற்கு வரும் கார்த்தி அதன் பிறகு அரசியல் பக்கமே திரும்பி பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவர் சமுதாயத்தை சேர்ந்த கார்த்திக்கு தற்போதும் அந்த சமுதாய இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். மேலும் கார்த்தி செல்லும் இடம் எல்லாம் அந்த சமுதாய இளைஞர்கள் கூடுவது தற்போதும் தொடர்கிறது. எனவே அவற்றை எல்லாம் தங்களுக்கான வாக்காக மாற்ற கார்த்தி உதவுவார் என்று எடப்பாடி நம்புகிறார்.