இளம் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்! பதற வைக்கும் காரணம்!

கடனை திருப்பித் தராததால், பெண் ஒருவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம், கொல்லேகால் அருகே உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் வசிப்பவர் ராஜாமணி. 30 வயதை கடந்த ராஜாமணி, பெங்களூருவில் ஒரு சிறிய ஓட்டலையும், சிட் ஃபண்ட் தொழிலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சிலரிடம் ராஜாமணி ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ராஜாமணி இருந்துள்ளார். இதனால், கடன் கொடுத்த நபர்கள், கொடிகஹள்ளி பகுதியில் ராஜாமணியை சுற்றி வளைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து, செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர். 

இதனை அவ்வழியே சென்ற நபர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவே, இது போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதன்பேரில், 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.