மகனுக்கு பிரபல பள்ளியில் சீட்! ஆசை காட்டி 28 வயது பெண்ணை அனுபவித்த சமூக ஆர்வலர்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

கல்வி உரிமை போராளியும், கன்னட அமைப்பு ஒன்றின் தலைவருமானவர் தனது மகனுக்கு பள்ளியில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.


 தனது மகனுக்கு பிரபல பள்ளியில் சேர்க்கும் ஆசையில் ராமநகரத்தை அடுத்த ஹரோஹள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவரும் கன்னட சிரி சேனே என்ற அமைப்பின் தலைவருமான ஆனந்தை அணுகியதாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பதில் உதவியாக தனது விட்டில் சமையல் செய்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்யுமாறு அந்த நபர்க் கேட்டுக்கொண்டதாகவும், அதற்காக அவரது வீட்டில் தங்கிய தன்னை இரவிலும் தங்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பேரில் தங்கிய தன்னை நடு இரவில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், தொடர்ந்து தன்னை 5 நாட்கள் தங்கச் செய்து தினமும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை படம் பிடித்து வைத்துக்கொண்டதாகவும அவர் தெரிவித்துளார். 

இதனை வெளியில் கூறினாலோ காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ இணையதளத்தில் பதிவேற்றி விடுவதாகவும், தன்னையும் தனது மகனையும் கொன்று விடுவதாகவும் அந்த நபர் மிரட்டியதாக அந்தப் பெண் கூறியுள்ளார். எனினும் அந்தப் பெண் தைரியமாக வெளியில் வந்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆனந்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.