அடிக்கிறான்..! உதைக்கிறான்..! உதவுங்கள் ப்ளீஸ்..! கண்களில் ரத்தம் வடிய இளம் பெண் வெளியிட்ட பகீர் வீடியோ!

கணவரின் சித்வரதையை தாங்க முடியாத ஒருவர் சொந்த நாட்டிற்கு செல்ல யாராவது உதவ வேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த ஜாஸ்மின் சுல்தானா என்பவருக்கும் முகமது கிசார் உல்லா என்பவருக்கும் 6 வருடங்களுக்குமுன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவியும் அவருடனே வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தையும், 17 மாதம் ஆன ஒரு குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில் தன்னுடைய கணவர் கொடூரமாக தாக்கி கொடுமைப்படுத்துவதாக ஜாஸ்மின் சுல்தானா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சுல்தானா கடுமையாக தாக்கப்பட்டு முகம் வீங்கிய நிலையில், கண்களில் ரத்தம் வழிகிறது. அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “அவசரமாக எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. என்னுடைய பெயர் ஜாஸ்மின் சுல்தானா. நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறேன். என் கணவர் பெயர் முகமது கிசார் உல்லா. நான் கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளேன். எனவே நான் இந்தியா வர உதவி செய்யுங்கள்” என ரத்தக் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அந்த பெண்ணை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.