கர்ப்பதடை மாத்திரையில் சயனைடு விஷம்..! நம்பி உல்லாசமாக இருந்த 20 பெண்கள்! ஒருவர் பின் ஒருவராக கொலை! பதறவைத்த சயனைடு மோகன் வழக்கில் திருப்பம்!

கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களைக் காதலிப்பது போல் நடித்து கொலை செய்து வந்த சைக்கோ சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு மரண தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.


கர்நாடக மாநிலத்தில் மங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருமண ஆசை காட்டியோ அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ பெண்கிளிடம் பேசி மயக்கி உல்லாசம் அனுபவிப்பதை ஒரு வேலையாக வைத்திருந்தவர் மோகன். உல்லாசம் அனுபவித்து விட்டு கர்ப்பத்தடை மாத்திரை என்று ஒன்றை கொடுப்பார். அதை சாப்பிட்டவுடன் அந்த பெண் இறந்துவிடுவார். பெண்களை காம வலையில் விழ வைப்பதும் பின்னர் அவர்களை கொலை செய்து நகைகளை சுருட்டுவதையும் முழுநேர தொழிலாக செய்து வந்தவன் மோகன். 

2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் 20 பெண்களை ஏமாற்றி சயனைடு கொடுத்து கொன்றதால் சயனைடு மோகன் என்று அழைக்கப்படுகிறான் மோகன். ஏற்கனவே 3 கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்ற சயனைடு மோகனுக்கு தற்போது 4வது வழக்கிலும் மரண தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

2005ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா பகுதியில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக தற்போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முதலில் வேலை வாங்கி தருவதாக பெண்களிடம் பேசுவார். நிறைய நகைகள் அணிந்து வந்தால்தான் வேலை கிடைக்கும் என கூறி அழைத்து வந்து ஒரு லாட்ஜில் அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஒரு மாத்திரை தருவார். அது கர்ப்பத் தடைக்கான மாத்திரை என கூறுவர். ஆனால் அது சயனைடு என தெரியாமல் சாப்பிடும் பெண்கள் இறந்துவிடுவர். பின்னர் அந்த பெண் அணிந்திருக்கும் நகைகளுடன் தப்பி விடுவார். 

பொய்யான அடையாளங்கள், கற்பழிப்பு, மற்றும் சயனைடுடன் போடப்பட்ட 'கருத்தடை' மாத்திரைகள் மூலம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் தொடர்ச்சியான வழக்குகளுக்குப் பிறகு, மோகன் இறுதியாக பன்ட்வால் கிராமப்புற போலீசாரால் 2009 இல் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் சயனைடு மோகன் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் கடத்தலுக்கு 10 ஆண்டுகள், பாலியல் பலாத்காரத்திற்கு ஏழு ஆண்டுகள், விஷம் கொடுத்த்தற்கு 10 ஆண்டுகள், கொள்ளைக்கு ஐந்து ஆண்டுகள், மோசடி செய்ததற்கு ஒரு வருடம், ஆதாரங்களை அழித்ததற்காக ஏழு ஆண்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறைத்தண்டனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

மரண தண்டனை உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படும் வரை அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.