50 ஆயிடிச்சி..! மணிவிழா முடிஞ்சிடிச்சி..! ஆனாலும் இளசுகளுக்கு டஃப் கொடுக்கும் போட்டோ சூட் நடத்திய பெருசுகள்!

காதலுக்கு வயது இல்லை. காலம் கடந்தாலும் கல்யாண வாழ்க்கை என்ன கசக்குமா என்ன? கர்நாடகா மாநிலத்தில் ஒரு தம்பதினர் தனது 50வது ஆண்டு திருமண ஆல்பம் பாடலில் நடித்து வீடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ தற்போது இளைஞர்களிடம் மிகுந்த பாராட்டையும் காதலின் உணர்வையும் அந்த தம்பதினர் உணர்த்தியுள்ளனர்.


கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது குண்டப்புரா. இந்த பகுதியில் அமைந்துள்ள கேங்கோலி என்கிற ஊரில் வசிப்பவர் தான் சுதானந்த ஷெனாய் மற்றும் உமா ஷெனாய் என்கிற தம்பதியினர். இந்த தம்பதினர் 1970ல் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 50 வருடங்களைக் கடந்தும் இன்றும் இளம் ஜோடிகளாகவே திகழ்கின்றனர்.

இவர்களின் 50வது திருமண ஆண்டை பொன்விழா மண ஆண்டை கொண்டாடியுள்ளனர். அதற்கென இருவரையும் ஆல்பம் ஷூட்டில் நடிக்கவைத்து, பார்த்து பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் 50வது ஆண்டு திருமணம் சார்ந்த ஃபோட்டோ மற்றும் வீடியோ ஷூட்டில் நடித்துள்ளனர். 

இந்த ஃபோட்டோ மற்றும் வீடியோ காட்சிகளில் இவர்கள் இருவரும் மிகுந்த துடிப்புடன் இன்றும் இளமை காதலுடன் நடித்துள்ளார்கள். மேலும் ஆடிப்பாடி, அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். இவர்களின் 50-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு வெளியான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இதனை கண்ட அனைவரும் வாழ்ந்தாள் இவர்கள் போன்று வாழ வேண்டும் என்றும், இவர்கள் போன்று காதலுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று இந்த வீடியோ காட்சிகளி பகிர்ந்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையவாசிகளிடம் வைரலாகி வருகிறது.