கர்ப்பிணி மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தொழில் அதிபர் செய்த பயங்கரம்! மகன், தாய், தந்தைக்கும் ஏற்பட்ட விபரீதம்!

கர்நாடக மாநிலத்தில் தொழிலில் நஷ்டம் ஆனதை அடுத்து கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு மிரட்டியதால் குடும்பத்தாரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் தொழிலதிபர் ஒருவர்.


கடர்நாடக மாநிலம் தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம் பிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டேட்டா பேஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் உடுப்பி பகுதியில் கிரானைட் தொழில் தொடங்கலாம் என நினைத்த பிரகாஷ் துபாயில் உள்ள தொழிலதிபரிடம் கடன் வாங்கியுள்ளார். கிரானைட் தொழிலும் கை கொடுக்காததால் தொழிலை நடத்த முடியாமல் கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதுதவிர பணம் கொடுத்த துபாய் தொழிலதிபர் அடிக்கடி பணம் கேட்டு பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. பெரும் கடனாளியான பிரகாஷ் என்னவென்று செய்வதறியாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல் ஆனார். 

தன் குடும்பத்தாரை வெளியில் அழைத்து செல்வதாக கூறிய  பிரகாஷ் மைசூரு சாலையில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளார். பிறகு தன்னுடைய நண்பருக்கு போன் செய்து கடனை அடைக்க முடியாததால் காலை உயிரோடு இருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குள் ஓட்டலில் கர்ப்பிணி மனைவி நிகிதா, மகன் ஆர்ய கிருஷ்ணா, தந்தை நாகராஜ்,  தாய் ஹேமலதா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் போனில் மிரட்டல் விடுத்த துபாய் தொழிலதிபரை தேடிவருகின்றனர்.