நவயுக நாயகி! கணவன் கற்பழித்த சிறுமியை கணவனுக்கே கட்டி வைத்த மனைவி!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவனை காப்பாற்ற நினைத்த மனைவி அவருக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்ததால் கைது செய்யப்பட்டார்.


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் கங்கா ராஜ். இவர் பல்லவி என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பல்லவியின் உறவினர் ஒருவரின் 13 வயது சிறுமி, கங்கா ராஜ் பல்லவி தம்பதியுடன் தங்கியிருந்துள்ளார்.

அப்போது அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் எப்படியோ வெளியி்ல் கசிந்துவிட்டது. குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் செல்லவே, அதன் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று அந்த சிறுமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விஷயம் பெரியதாவதை தடுக்க நினைத்த மனைவியோ, தனது கணவனுக்கு அந்த சிறுமியை மணமுடித்து வைத்தார்.

இதை அறிந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், போலீசில் புகார் அளித்தனர். பின்னர் கங்கா ராஜையும் அவரது மனைவி பல்லவியையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.