பெண் தொழில் அதிபர் ஸ்ரீமதி கொடூர கொலை! உடலை மூன்று துண்டாக்கி வீசிய கொலையாளி!

கர்நாடகா மாநிலத்தில், தலை வேறு, உடல் வேறு என இளம்பெண் வெட்டி வீசப்பட்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் உள்ள அட்டாவரில் மின்சாதன விற்பனை அங்காடி நடத்தி வருபவர் ஸ்ரீமதி ஷெட்டி.  இவர், நந்தி குட்டேவில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வரும் சாம்சன் என்பவருக்கு,கடன் கொடுத்துள்ளார். இதைப் பெற்றுக் கொண்ட சாம்சன் பாதியை மட்டுமே திருப்பி அளித்துள்ளார். இதில், அதிருப்தி அடைந்த ஸ்ரீமதி ஷெட்டி, அவ்வப்போது சாம்சனிடம் பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார்.

ஆனால், தொழில் நஷ்டம் காரணமாக, கடனைத் திருப்பித் தர முடியவில்லை, என, சாம்சன் கூறியுள்ளார். ஆனால், ஆறுதல் அடையாத ஸ்ரீமதி கடந்த 11ம் தேதியன்று, சாம்சனின் வீட்டிற்கே சென்று, வாக்குவாதம் செய்துள்ளார். அதில், ஆத்திரம் அடைந்த சாம்சன், ஸ்ரீமதியை கொன்று, அவரது உடலை 3 துண்டாக வெட்டி, கோணிப்பையில் கட்டி, நள்ளிரவு நேரத்தில், பல்வேறு பகுதிகளுக்குச்சென்று வீசிவிட்டார். 

கர்நாடகாவை உலுக்கிய இந்த கொடூர வழக்கு பற்றி, 30 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், பண்டுவா காலேஜ் ஜங்ஷன், பதுவா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஸ்ரீமதியின் உடல் பாகங்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டன. பின்னர், ஸ்ரீமதியின் ஃபோன் அழைப்புகளின் அடிப்படையில், குற்றவாளி யார் எனக் கண்டுபிடித்த போலீசார், சாம்சனை தேடி விரைந்தனர்.

அவரை  சுற்றி வளைத்தபோது, அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை கைது செய்தனர். கடந்த 4 நாட்களாக, கர்நாடகாவை உலுக்கி வந்த இவ்வழக்கு, தற்போது  முடிவுக்கு வந்துள்ளது. மேலும் கொலைக்கு உதவியதாக சாம்சனின் கள்ளக் காதலியும் சிக்கியுள்ளார்.