அவன் மறுபடியும் வருவான்..! என்னை துன்புறுத்துவான்..! ரத்த காயத்துடன் கதறும் மனைவி! அதிர வைக்கும் காரணம்!

டெல்லி: ''எனது கணவரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்,'' என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியப் பெண் கோரியுள்ளார்.


பெங்களூருவைச் சேர்ந்த ஜாஸ்மின் சுல்தானா என்ற 33 வயதான பெண் ஒருவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''நான் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள ஷார்ஜாவில் எனது கணவர் முகமது கிஸார் உல்லாவுடன் வசித்து வருகிறேன். எம்பிஏ படித்துள்ள நான் பெங்களூருவில் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக பணிபுரிந்தேன்.

ஏற்கனவே திருமணமான நான் விவாகரத்து பெற்றுவிட்டு, 7 ஆண்டுகளுக்கு முன், முகமது கிஸாரை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு தற்போது 6 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே திருமணமான என்னை மறுபடி திருமணம் செய்துகொண்டதை ஒரு குற்றச்செயல் போல சித்தரித்து, தினசரி என்னை அடித்து உதைப்பதை முகமது கிஸார் வாடிக்கையாகச் செய்ய தொடங்கினார்.

கடந்த 6 ஆண்டுகளில் பலமுறை அவரால் காயம்பட்ட நான் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளேன். இந்த முறை சற்று அளவுக்கு அதிகமாக என்னை அடித்துவிட்டார். என்னை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக காப்பாற்ற வேண்டும்,'' எனக் கூறியிருந்தார்.  

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பகிரப்படவே, விசயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் வாயிலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, ஜாஸ்மினின் கணவரை ஷார்ஜா போலீசார் கைது செய்தனர். அதேசமயம், காயம்பட்ட ஜாஸ்மின் இனி ஒன்றாக வாழ விருப்பம் இல்லை என்பதால் உடனடியாக தன்னை பெங்களூரு அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கிறார். இதுபற்றி நடவடிக்கை எடுத்து வருவதாக, வெளியுறவு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.