கர்நாடக மாநிலத்தில் சாமிக் கும்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் புடவையில் திடீர் என தீப்பற்றிய சி.சி.டி.விக் காட்சிகள் வைரலாகி வருகிறது..
கோவிலுக்குள் புடவையில் பற்றிய தீ! கற்பை காப்பாற்ற பெண் எடுத்த விபரீத முடிவு! வைரல் வீடியோ!
கர்நாடக மாநிலம் , ஹூப்ளியிலுள்ள கோவிலில் பெண் ஒருவர் சாமிக்கும்பிட வந்தபோது, எதிர்ப்பாராத விதமாக அவரது புடவை மீது தீப்பற்றியது. முதலில் கவனிக்காதவர்ப் பின்பு சூட்டினை உணர்ந்துப் பார்த்த போது அதிர்ந்து போனார்.
உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தும் ,காற்றின் வேகத்தினால் தீ வேகமாக உடல் முழுவதும் பரவியது. தீயின் சூட்டினை தாங்க முடியாமல் அந்தப்பெண் ஓட துவங்க, அலறல் சத்தம்க் கேட்டு அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கோவிலுக்குள் நடந்த இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே தீ பற்றியதும்அந்த பெண் தனது புடவையை அவிழ்த்து வீசியிருந்தால் தப்பியிருக்க முடியும். ஆனால் தன்னை ஆண்கள் புடவை இல்லாமல் பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண் புடவையை அவிழ்க்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.