ஆண் குழந்தை இல்லையா? பெண் குழந்தை கழுத்தை நெறித்து தகப்பன் செய்த விபரீதம்! பதற வைக்கும் காரணம்!

கர்நாடகாவில், ஜோதிடர் சொன்னதை நம்பிய தந்தை பெற்ற மகளையே கழுத்தை நெறித்து கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம்  புச்சனஹள்ளி என்ற கிராமத்தில் மஞ்சு-சுசித்ரா தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைப் பிறந்தது. கணவர் மஞ்சு  ஜோதிடத்தின் அதிக நம்பிக்கை உள்ளவர். எனவே ஜோதிட நபர், மஞ்சுவுக்கு ஆண்க்குழந்தை தான் பிறக்கும் என கூறியதை நம்பி எல்லோரிடமும் கூறிப் பூரித்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் சுசித்திராவிற்க்கு ஆரோக்கியமாக பெண் குழந்தை பிறந்தது.ஆனால் ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்த நேரத்தில் பெண் குழந்தை பிறந்ததில் மஞ்சு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். அதிலிருந்து யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இதனை அடுத்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து மஞ்சு கொலை செய்ததைப் பார்த்த சுசித்ரா அதிர்ச்சியடைந்து கூச்சலிட கணவர் மஞ்சு அங்கிருந்து தப்பிவிட்டார். மேலும் புகார் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மஞ்சுவை போலிஸார் தீவிரமாக  தேடிவருகின்றனர்.