ஏம்ப்பா இப்படி பண்ணுன..? தந்தையின் தகாத உறவால் , ஏதும் அறியாத மகளுக்கு நேர்ந்த பயங்கரம்!

கர்நாடக மாநிலத்தில் தகாத உறவால் ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தியும் ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா தலவட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனியார் பேருந்து ஏஜண்டாக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கு திருமணமாகி ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இவரது மனைவி பெயர் லதா, இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்கிறார். இவர்களின் செல்ல மகள் அம்ருதா, இரியூரில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து கொண்டு இருகிறாள். 

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணி அளவில் அருண்குமாரின் வீட்டில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியானது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருண்குமாரின் வீட்டில் தீ பிடித்து விட்டது என எண்ணி, தீயை அணைக்க விரைந்துள்ளார்கள். அப்போது திடீரென வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அருண்குமார், அவரது மனைவி லதா மற்றும் அவர்களது மகள் அம்ருதா ஆகியோரின் உடல்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு இரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் இதற்கிடையில், தீவிர சிகிச்சையில் இருந்த 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேரும் இறந்த நிலையில், காவல்துறையினர் அருண்குமாரின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தான் இந்த தற்கொலை குறித்த உண்மை வெளிவந்துள்ளது. அந்த உணமை என்னவென்றால், அருண்குமார் தனியார் பேருந்து ஏஜண்டாக பணி புரிந்து வந்த இடத்தில் பல பெண்களுடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி லதாவுக்கு தெரியவர, கணவனுக்கும் மனைவிக்கும் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கம். இந்த சண்டையால் அருண்குமாரின் மகளும் பாதிக்கப்பட்டுள்ளார். 

 இதனிடையே நேற்று காலையும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு மிகவும் பெரிய அளவில் முற்றியதின் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, மகள் அம்ருதாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். பின்னர் அவர்கள் தங்களது உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டனர்.

 நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது தீவிபத்து அல்ல என்றும் இது முழுமையான தற்கொலையா என்ற சந்தேக கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு தகாத உறவினால் இப்படி ஒரு குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.