மாணவிகளின் ரகசிய செல்போன்! கண்டுபிடித்த கல்லூரி ஆசிரியர்! சுத்தியலால் ஒவ்வொன்றாக நொறுக்கப்பட்ட பரிதாபம்!

கர்நாடகாவில் விதிகளை மீறி வகுப்பிற்குள் செல்போன் எடுத்து வந்ததால் அதை கல்லூரி முதல்வர் மாணவர்கள் முன்னிலையிலேயே உடைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.


கர்நாடகா மாநலம் வடகனரா மாவட்டம், கார்வாரில் எம்.இ.எஸ். சைத்தன்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் முதல்வரான ஆர்.எம். பட் மிகவும் கண்டிப்பானவர் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக கல்லூரியில் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என பல கல்லூரி நிர்வாகங்கள் தடை விதித்துள்ளதால் அதையே இந்த கல்லூரி முதல்வரும் பின்பற்றி வருகிறார்.

இருப்பினும் கல்லூரி பேராசிரியர்களுக்கு தெரியாமல் மாணவர்கள் ரகசியமாக வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தவதாக அவரு காதுக்கு தகவல் எட்டியுள்ளது. (நம்மூர் பாஷையில் யாரோ போட்டுக் கொடுத்துள்ளார்கள்) பின்னர் மாணவர்கள் அனைவரையும் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு உத்தரவிட்ட கல்லூரி முதல்வர் அனைவரின் பைகளையும் சோதனையிட்டார்.

அதில் 16 மாணவ, மாணவிகள் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்களை கண்டித்த முதல்வர் அந்த செல்போன்களை பறிமுதல் செய்து அவர்கள் கண் முன்னாலேயே ஒவ்வொன்றாக சுத்தியலால் உடைத்தெறிந்தார். பெற்றோரிடம் கெஞ்சி கூத்தாடி 20,000 30,000 என்ற விலையில் வாங்கிய செல்போனை இப்படி போட்டு உடைக்கிறாரே என்று மனம் குமுறினர்.

ஒவ்வொரு செல்போனை உடைக்கும்போதும் மாணவர்கள் கண்ணீர் விட்டு கெஞ்சினர். ஆனாலும் கடமையை செவ்வனே நிறைவேற்றினார் கல்லூரி முதல்வர். 

கிராமங்களில் இருந்து வருவதால் பாதுகாப்புக்காக செல்போன்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அதை ஏற்க மறுத்து கல்லூரி முதல்வர் செல்போன்களை உடைத்து விட்டார் என மாணவ, மாணவியர் வேதனை தெரிவித்தனர்.