சென்டர்மீடியனில் மோதி 5 முறை பல்டி அடித்த இன்னோவா! கோர விபத்தில் 7 பேர் பலி! ஆபத்தில் முடிந்த அசுரவேகம்!

கர்நாடக மாநிலத்தில் கார் ஒன்று சாலை சென்டர் மீடியனில் மோதி 5 உருண்ட விபத்தில் 6 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.


அருகில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றுவிட்டு விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டு விட்டு 11 பேர் ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குனிகல் என்ற என்ற இடத்தில் செல்லும்போது காரின் டயர் ஒன்று வெடித்தததில் கட்டுப்பாட்டை  இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி 5 முறை உருண்டது. 

அப்போது காரில் இருந்த சிலர் சாலையில் தூக்கி வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 உடல்களை சாலையில் இருந்தும் ஒரு உடலை சாலை நடுத் தடுப்பில் இருந்தும், மேலும் 3 உடல்களை காருக்குள் இருந்தும் மீட்டனர். பவானி என்ற 4 வயதுச் சிறுமி உட்பட படுகாயம் அடைந்து நினைவிழந்த மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிந்தவர்களின் பெயர்கள் திருமணி, செல்வி, நாகம்மா, வீரம்மா, நிர்மலா, உமா, காளிதாஸ் எனத் தெரிய வந்தது அனைவரும் 42 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள். இந்த விபத்து காரணமாக பெங்களூரு - மங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கபப்ட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.