காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அருகே இன்று காலை திடீரென குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
எம்எல்ஏ வீடு முன்பு குண்டு வெடித்தது! ஒருவர் பலி! பதற்றம்!

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா. இவரது வீடு பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இன்று காலை ஒன்பதரை மணியளவில் அவரது வீட்டு முன்பு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்தார் ஒரு நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டு வெடித்ததில் அவரது உடல் சிதறிப் போனது. தகவலறிந்து பெங்களூர் காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
வெடித்தது மர்ம பொருள்தான் என்றும் வெடிகுண்டா இல்லையா என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்த வர் உடல் சிதறி உள்ளதை பார்க்கும்போது அது சக்தி வாய்ந்த குண்டாக இருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ வீடு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.