நாடார் கடைகளை அமேசான் கடைகளாக மாற்றுவது எப்படி? வொர்க் அவுட் ஆகும் நம்ம அண்ணாச்சி கரிக்கோல் ராஜின் பக்கா பிளான்!

இந்த செய்தியை உங்கள் பகுதியில் உள்ள அண்ணாச்சி கடைக்காரரிடம் கொண்டு போய் சேருங்கள்


இந்த முழு ஊரடங்கு நேரத்திலும் நமது அண்ணாச்சிமார்களின் உழைப்பை நிரூபிக்கும் விதமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் பகுதி மக்களுக்கும் பலசரக்கு பொருட்களை சேர்ப்பதில் மும்முரமாக இருந்து அண்ணாச்சி கடை என்பதை நிரூபணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்த மாதிரியான அசாதாரண சூழ்நிலையில் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், உடனே தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கள் கடையில் கிடைக்கும் என்றும், அந்த பொருட்களை தங்குதடையின்றி கொண்டு வந்து சேர்ப்போம் என்றும், டெலிவரி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு செய்து தரப்படும் என்று கூற சொல்லுங்கள் 

இனி வரும் காலங்களிலும் இதேபோல் சேவை தொடரும் என்றும் , தொலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்தால் தங்கள் இல்லம் தேடி கொண்டு வந்து பொருட்களை சேர்ப்போம் என்றும், வாடிகையாளரின் அருகே உள்ள வீட்டினருக்கும் இதேபோல் தொலைபேசி ஆர்டர் பொருட்கள் கொண்டு வந்து சேர்ப்போம் என்று சொல்ல சொல்லுங்கள்

இது உங்களுக்கு மீண்டும் ஒரு பொற்காலம். தங்களின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களைப்பெற்று அதன் மூலம் அவர்களிடம் ஆர்டர் பெற்று சப்ளை செய்து வணிகத்தை விருத்தி செய்யுங்கள். இனிமேல் சூப்பர் மார்கெட்களுக்கு ஜனங்கள் செல்ல மாட்டார்கள். நம் கடைக்கு வருபவர்கள் குறிப்பிட்ட பொருளை மட்டும் வாங்குவார்கள்.

சூப்பர் மார்கெட் செல்பவர்களுக்கு பார்க்கும் பொருளை எல்லாம் வாங்க தோன்றும். அதற்கு தற்பொழுது வாடிக்கையாளரின் பொருளாதாரம் இடம் கொடுக்காது. எனவே நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். இதே எண்ணம் கொண்டு அவர்களின் கருத்தின் பிரகாரம் நமது சமுதாய மக்களுக்கு இந்த எண்ணத்தை கொண்டு போய் சேர்த்துக்கொண்டு இருக்கிறோம்.

தாங்களும் மீண்டும் நமது சமுதாய வளரச்சிக்காக நமது அண்ணாச்சி கடை உரிமையாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும்படி கேட்டுக்கொள்குறோம். நாடார் மஹாஜன சங்க நிர்வாகிகள், காமராஜ் யுவகேந்திரா அமைப்பினர்கள் இதில் இறங்கி உள்ளனர்.

நாளை அண்ணாச்சி கடைகளை அம்மேசான் கடைகளாக மாற்றுவோம்