கிருஷ்ணர் பொம்பளை பொறுக்கி..! அத்திவரதர் ஒரு பரதேசி..! கோவை காரப்பா ஜவுளிக்கடை அதிபரின் அடாவடி! கமல் ஆதரவு?

இந்துக் கடவுள்களை அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டவரின் ஜவுளிக் கடைக்கு கமல்ஹாசன் விளம்பரம் செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.


தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் துணிக்கடைகளின் விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக வந்து செல்கிறது. நடிகர் நடிகைகளும் பிரபல துணிக் கடைகளுக்கு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் காரப்பா சில்க்ஸ் கடைக்கு நடிகர் கமல்ஹாசன் விளம்பரம் செய்ததாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த விளம்பரம் சர்ச்சை ஆவதற்கு காரணம் இந்த துணிக்கடை அதிபர் இந்து கடவுள்களுக்கு எதிராக பேசியதுதான். காரப்பா சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் அண்மையில் கூட்டம் ஒன்றில் இந்து கடவுள்களை அவதுறாக விமர்சித்து இருந்தார். கிருஷ்ணரை பொம்பளை பொறுக்கி என்றும் அத்திரவரதரை பரதேசி என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அத்திவரதருக்கு காஞ்சி நெசவாளிகள் பட்டு நெய்து கொடுத்ததையும் கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ வைரல் ஆனதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பியது. காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்ன.  

இந்நிலையில் இவர் நடத்தி வரும் ஜவுளிக் கடைக்கு கமல்ஹாசன் பெயரில் காரப்பா சில்க்ஸ் கடைக்கு விளம்பரம் செய்வது போன்ற டிவிட் வைரலாகி வருகிறது. அதில், “பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு ! யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா ! விலையும் தரமும் இங்கு” என பதிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தரப்பில் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காரப்பா சில்க்ஸ் உரிமையாளர் இந்துக்கடவுளை விமர்சித்த நிலையில் கமல்ஹாசன் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.