விபச்சார அழகியுடன் பைக்கில் கபடி வீரர் உல்லாச பயணம்..! சாலையிலேயே செய்த செயல்! நொடியில் நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

மும்பை: கபடி வீரருடன் பைக்கில் சென்ற பாலியல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.


மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் யோகேஷ் கஜானன் லுகாடே (28 வயது). மாநில அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி வரும் லுகாடே, கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு புரோக்கர் உதவியுடன், பாலியல் தொழிலாளி ஒருவரை பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

29 வயதான அந்த பெண்ணை வெளியில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, அடுத்த 3 மணிநேரத்திற்குள் திரும்ப கொண்டுவந்து விடுவதாகக் கூறிவிட்டு, அவர் சென்றுள்ளார். ஆனால், வழியில் லுகாடே ஓட்டிச் சென்ற பைக் ஒரு தடுப்பு மீது மோதியுள்ளது. இதன்போது பின்னால் அமர்ந்திருந்த பாலியல் தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த லுகாடே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எனினும், பைக் ஆவணங்களை வைத்து அவரை போலீசார் கண்டுபிடித்து, கைது செய்துள்ளனர். காசு கொடுத்து விபரீதத்தை விலைக்கு வாங்கிய கதையாக லுகாடேவின் வாழ்க்கை இச்சம்பவத்தால் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.