கன்னியாகுமரி மாவட்டத்தில் டியூஷன் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எதிரான கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த தாத்தா கூப்டாங்கனு மாடிக்கு போனேன்..! 58 வயது கிழட்டு நரியால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீத அனுபவம்!
இதுதொடர்பாக கடந்த 2 நாளில் மட்டும் 2 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே குமாரபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரத்தின சிவா எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பல நாள்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் நாகர்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ரத்தின சிவா போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் 2 நாட்களுக்கு முன்னர் 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்ததாக போக்குவரத்துக் கழக டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் மயிலாடியைச் சேர்ந்த குருசாமி(58), இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, குருசாமி போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்ற சிறுவனை ஆசிரியை தாக்கிய சம்பவம், குளச்சல் பகுதியில் டியூஷனுக்குச் சென்ற மாணவியை வீட்டில் அடைத்து வைத்து கத்தி, கரண்டிகளால் தாக்கிய சம்பவம் என சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.