திருமணமாகி 3 நாள்! சோர்வுடன் தூங்கி எழுந்த மாப்பிள்ளை! புரோக்கருடன் சேர்ந்து புது மனைவி செய்து வைத்திருந்த செயலால் அதிர்ச்சி!

கான்பூர்: மாப்பிள்ளை வீட்டாரை மயக்கமடைய செய்துவிட்டு, நகைகளுடன் எஸ்கேப் ஆன புதுமணப் பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.


உத்தரப் பிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன், பிரவீண். இவருக்கு சமீபத்தில் இளம்பெண் ஒருவருடன், 3 நாட்களுக்கு முன்பாக திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமணத்தை டிங்கு என்ற புரோக்கர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். திருமணம் நடந்து முடிந்த நிலையில், மாப்பிள்ளை உள்பட அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த டிங்கு, புதுமணப் பெண்கூட சேர்ந்து அனைத்து நகைகள் மற்றும் விலை மதிப்பு நிறைந்த பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இதன்பேரில், திருமணம் முடிந்து 3 நாள் கடந்த நிலையில், இரவு நேரத்தில் அனைவருக்கும் மயக்க மருந்து தரப்பட்டது. அனைவரும் மயங்கிய நிலையில், டிங்கு, மணப்பெண் கூட சேர்ந்து 

திட்டமிட்டபடியே அனைத்தையும் திருடிச் சென்றுவிட்டாராம்.

மறுநாய் மயக்கம் தெளிந்து எழுந்த மாப்பிள்ளை வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பேரில் போலீசில் புகார் அளித்தனர். ஏழை வீட்டுப் பெண் என்று கூறி, திருமணச் செலவு அனைத்தையும் மாப்பிள்ளை வீட்டாரே செய்திருக்கிறார்கள். இருந்தும், அவர்களை எதுவும் மிச்சமின்றி ஆப்படித்த புரோக்கர் டிங்கு மற்றும் புதுமணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.