காட்டெருமையால் பெண்மணிக்கு அரங்கேறிய கொடூரம்! என்ன தெரியுமா?

கன்னியாகுமரி அருகே காட்டெருமை தாக்கி 6 மாத்கமாக சிகிச்சை எற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி,  சிற்றார் சிலோன் காலனி அரசு ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தவர் சந்திரா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்ப்பாராத விதமாக பணியிடத்தில்  காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார் சந்திரா.

இந்த நிலையில் நாகர் கோவில் ஆசாரி பாளையம் அரசு  மருத்துவமனையில் 6 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த சந்திரா  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

மேலும் அரசு ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து இது போன்ற விலங்குகளினால்   உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது, எனினும் அரசு  பொறுப்பற்ற இந்த போக்கு தொழிலாளர்களுக்கு வருத்தமும், அச்சமும் தருவதாக தெரிவிக்கின்றனர்..