நடு ராத்திரி..! துரத்திய பேய்..! மாயமான இளைஞன் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மர்மம்! கன்னியாகுமரி திகுதிகு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூக்கத்தில் பேய் துரத்துவது போல் கனவு கண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.


கன்னியாகுமரியில் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் அருகில் இருந்த அயனிவிளை நாகதேவி கோவிலுக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதையடுத்து பொழுது விடிந்தவுடன் அப்பகுதி வழியை அர்ச்சகர் ஒருவர் கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் வருவது போல் உணர்ந்த அவர் கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கிணற்றுக்குள் இருந்து தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த கிணறு முழுவதும் கம்பி அமைக்கப்பட்டு ஒரு நபர் மட்டுமே கீழே இறங்க முடிந்தவரை மட்டுமே அந்த கிணற்றை வழி இருந்தது. இந்நிலையில் இந்த நபர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார்.என்பது தெரியாமல் அர்ச்சகர் திகைத்துப் போய் நின்றுள்ளார். இதையடுத்து உடனே ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிணற்றுக்குள் இருந்து மேலே வர முடியாமல் தவித்த இளைஞரை தீயணைப்பு துறையினர் கயிற்றை உள்ளே விட்டு பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அவரிடம் நீங்கள் எவ்வாறு கிணற்றுக்குள் விழுந்தீர்கள் என கேட்டபோது அதற்கு இரவு தூக்கத்தில் தன்னை பேய் துரத்துவது போல கனவு கண்டு ஓடி வந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக தெரிவித்தார்.

அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அந்த கிணற்றுக்குள் பல வருடங்களாக புதையல் இருந்து வருவதாகவும் நீர் குறைந்த உடனே கிணற்றுக்குள் புதையல் ஏதேனும் இருக்கிறதா எனப்பார்க்க கிணற்றுக்குள் இறங்கியதாக ஊர் மக்கள் சந்தேகித்தனர். இதையடுத்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் அதற்கு பேய் துரத்துவது போல் கனவு வந்ததால் தான் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் வந்தனர். இந்நிலையில் இவர் உண்மையில் கனவு வந்து தான் கிணற்றுக்குள் விழுந்தாரா?அல்லது கிணற்றுக்குள் இருக்கும் புதையலை எடுக்க கும்பலாக வந்து ஒருவர் மட்டும் உள்ளே மாட்டிக் கொண்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.