குமரி மாவட்டத்தில் மகளின் விருப்பத்தை கேட்காமல் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்தவர் புதுமணப் பெண்ணாக காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்
விடிந்தால் நிச்சயதார்த்தம்! இரவில் காதலனுடன் சேர்ந்து இளம் பெண் செய்த விபரீத செயல்! காவல் நிலையம் வரை சென்ற பஞ்சாயத்து!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவரும் நிஷாந்த் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆதிராவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் கல்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவரை பேசி முடித்தனர்.
மகளின் விருப்பத்தை கேட்காத பெற்றோர் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆதிராவுக்கு 2 நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் நிலையில் ஆதிரா வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு தேடியும் ஆதிரா கிடைக்காத நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தை நாடினர்.
இதற்கிடையே கோயிலில் திருமணம் செய்துகொண்ட ஆதிரா மற்றும் நிஷாந்த் இருவரும் தம்பதியாக தக்கலை காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து ஆதிரா போலீசாரிடம், நிஷாந்த்தை தான் காதலித்து வந்த நிலையில் என்னை கேட்காமல் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். அதுபிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்று திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்தார்.
மேலும் தாங்கள் இருவரும் திருச்செந்தூர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த ஆதிரா பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் திரும்பி சென்றனர். ஆனால் நிஷாந்த்தின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து போலீசார் அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.