குழந்தைகளுடன் படுத்திருந்த பெண்ணுக்கு சதக் சதக்! நள்ளிரவில் தங்கராணிக்கு நேர்ந்த விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் இரவில் வீட்டில் தனது குழந்தைகளுடன் உறங்கிய பெண்ணை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் வசிப்பவர் செபஸ்டின் சுபாஷ் மற்றும் இவரது மனைவி தங்கராணி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செபாஸ்டின் சுபாஷ் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் அவர் அங்கேயே தங்கி பணியாற்றும் நிலையில் வாரம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். இந்நிலையில் நேற்றிரவு தங்கராணி மட்டும் இரு குழந்தைகள் வீட்டில் தனியாக தூங்கியுள்ளனர்.

அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் பலர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி உள்ளனர் இந்நிலையில் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட தங்கராணி நீங்கள் யார் எனக் கேட்டபோது அதற்கு அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில் கூச்சலிட ஆரம்பித்துள்ளார்,

அப்போது மர்மநபர்கள் கழுத்தில் கத்தியால் பலமாக தாக்கி உள்ளனர். தங்கராணி பலத்த காயத்துடன் கீழே சரிந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் உடனே அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 இந்நிலையில் காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தங்கராணி ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த  உடனே அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தங்கள் மகளின் உடலை கைப்பற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அப்பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.