தாழ்த்தப்பட்ட இளைஞருடன் காதல் திருமணம்! உயர் ஜாதிப் பெண் கடத்தல்! கவுரவக் கொலை..? கன்னியாகுமரி பதற்றம்!

கன்னியாகுமரியில் வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டதால், பெற்ற மகளையே பெற்றோர் கடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையை சேர்ந்த சரண்யா மற்றும் பூத பாண்டியை சேர்ந்த புயூட்டலின் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் பெற்றோர் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் திருமணம்.செய்து கொண்டனர். 

மேலும், சரண்யாவின் வீட்டோர் இந்த திருமணத்தை ஏற்க்காத நிலையில் அவர்கள் காவல் துறையுல் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்க்கு வந்த சரண்யா மற்றும் புயூட்டலினை காவல் துறையுனர் சார்பில் விசாரணை நடத்தினர். 

இதனை அடுத்து காவல் நிலையத்தில் இருந்தே சரண்யாவின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக சொல்லபடுகிறது. இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த புயூட்டலின் வீட்டார் தங்களது மருமகள் சரண்யா அவரது வீட்டினர், கடத்தி வைத்துள்ளதாகவும் அவரை ஆணவ கொலை செய்ய போவதாக போனில் மிரட்டுவதாகவும் உடனடியாக சரண்யாவை மீட்டு தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்.