4 பேரையும் ஏன் என்கவுண்டர் பண்ணுனீங்க? கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கனிமொழி!

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பெண் அரசியல் பிரபலங்கள் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.


நவம்பர் 27ம் தேதி தெலுங்கான மாநிலத்தில் சுங்கச்சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார் இன்று காலை அவர்களை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 

இதுகுறித்து பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து மற்ற மாநில அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். முக்கியமாக டெல்லி, உத்தரபிரதேச அரசுகள் கற்றுக்கொள்ளவண்டும் என எலியுறுத்தினார்.

இதுகுறித்து பாலபாரதி தெரிவித்துள்ள கருத்தில், என்கவுண்டர் நியாயமான தண்டனை போல் தோன்றினாலும், முறையாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும், பலாத்காரங்களுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்குமே மகிழ்ச்சி தருகிறது. அதே வேளையில் நியாயம் கிடைத்த உணர்வை தருகிறது. அதே வேளையில் என்கவுண்டர் மட்டுமே இதற்கு தீர்வா என்று யோசிக்க வைக்கிறது.  

என்கவுண்டர் சம்பவத்துக்கு காங்கிரசை சேர்ந்த விஜயதாரணி தெரிவிக்கையில், பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக கருதுகிறேன், எனது பாராட்டுக்கள் என தெரிவித்தார்.

தேமுதிகவை சேர்ந்த பிரேமலதா கூறுகையில் 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். ஒருபக்கம் என்கவுண்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன.