அரசியல் களத்தில் கலைஞரின் மூத்த மகள் செல்வி! தேர்தல் பிரச்சாரத்தில் கலங்கிய கண்களுடன் வாக்கு சேகரிப்பு!

மத்திய சென்னை வேட்பாளர் தயாதிதிமாறனுக்கு ஆதரவாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கருணாநிதி மகள் செல்வி.


வீடு வீடாக சென்று துண்டு சீட்டுகள் வழங்கி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என செல்வி கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனவும் கூறினார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளதாகவும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக மக்கள் தெரிவிப்பதாகவும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவை சரிசெய்யப்படும் என்றார். மேலும் , கருணாநிதி இல்லாமல் இந்த தேர்தலை சந்திப்பது மன வருத்தமாக இருப்பதாக கூறி பின்னர் கண்கலங்கியவாரே பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்விக்கு ஆரத்திஎடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆரத்தி எடுக்கவந்த ஒரு பெண்ணுக்கு நான் உங்களுக்கு ஆரத்தி எடுக்கிறேன் கொடுங்கள் என செல்வி கேட்க கூச்சத்தோடு அந்தபெண் வேண்டாம் என மறுத்தார் . தயாநிதிமாறனை ஆதரித்து செல்வி மேற்கொண்ட பிரச்சாரத்தில் தயாநிதிமாறனே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது