லாரி மீது கார் மோதி கோர விபத்து! பிரபல டிவி நடிகைக்கு ஏற்பட்ட பயங்கரம்!

கன்னட டிவி நடிகை ஷோபா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


கர்நாடக திரையுலகின் பிரபல இயக்குனராக உள்ள சீதாராம் இயக்கிய மகளு ஜானகி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை  சோபா. ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்த இவர் பாகல்கோட் மாவட்டம் பதாமி என்ற ஊரில் உள்ள பானாசங்கரி கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஷோபாவையும் சேர்த்து மொத்தம் ஏழுபேர் அந்த காரில் பயணித்தனர். 

சித்ரதுர்கா புறநகர்ப் பகுதியான குஞ்சினகனலு என்ற இடத்தை நெருங்கியபோது வேகமாக வந்த ட்ரக் அந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காரின் டயர் பிடித்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த சோபா உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் மீட்கப்பட்டு சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சோபா உயிரிழந்த சம்பவம் கன்னட தொலைக்காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோபா உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர் சீதாராம் எப்போதும் சிரித்த படி இருக்கும் சோபா திறமையான நடிகை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஷோபா உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.